• வாயில்
  • அரசியல்
  • உரைக்களம்
  • உலகம்
  • சிறப்பு நிகழ்ச்சிகள்
  • செய்திகள்
  • நாடகம்
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • வாயில்
  • அரசியல்
  • உரைக்களம்
  • உலகம்
  • சிறப்பு நிகழ்ச்சிகள்
  • செய்திகள்
  • நாடகம்
  • நிகழ்வுகள்
No Result
View All Result
No Result
View All Result

ஊடக சந்திப்பு Iஇலங்கை இந்திய வர்த்தக சங்கம் பரிஸ் பிரான்ஸ்

suthanrajtgte by suthanrajtgte
2023/01/06
in சிறப்பு நிகழ்ச்சிகள், செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Facebook

பிரான்ஸ் தமிழர்களின் ஒர் அடையாளமாகவுள்ள லா சப்பல் (La Chapelle) தமிழர் வர்த்தகர் பகுதியில், தமிழர் திருநாளாம் தைபொங்கல் பெருநாளினை, முதன்முறையாக இலங்கை இந்திய வர்த்தக சங்கம் முன்னெடுப்பதில் பெருமகிழ்வடைகின்றது.

எதிர்வரும் சனவரி 15ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு பொதுப்பொங்கலிடலுடன் நிகழ்வுகள் தொடங்க இருக்கின்றன. ஒவ்வொரு வர்த்தகர்களின் ஒரு பிடி அரசியின் கூட்டுப்பொங்கலாக, தமிழர்களின் பண்பாட்டினை பல்லின மக்களுக்கும் வெளிப்படுத்தும் இத்திருநாளில் அனைத்து வாடிக்கையாளர்களையும் வருகை தந்து சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம்.

இப்பெருநாளினை மையப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு பல பரிசில்களை வழங்கும் வகையில் நல்வாயப்பு சீட்டும் வர்த்தக நிலையங்களில் வழங்கப்படுகின்றது.

இயல் இசையென தமிழர்களின் பாரம்பரிய கலைவடிவங்கள் சங்கமிக்க, பரிஸ் 10ம் வட்டார நகரசபையின் அங்கீகாரத்துடனும், வட்டார காவல்துறையின் ஒத்துழைப்புடனும் வெளியரங்க நிகழ்வாக இது அமைய இருக்கின்றது.

இது தொடர்பில் இலங்கை – இந்திய வர்த்தக சங்கம் ஜனவரி 5ம் நாள் வியாழக்கிழமை ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி, இந்நிகழ்வு தொடர்பான விபரங்களை உத்தியோகபூர்வமாக பொதுமக்களுக்கு அறிவித்திருந்தது.

பிரான்ஸ் வாழ் தமிழர்களின் ஓர் அடையாளமாக லா சப்பல் தமிழர் வர்த்தக மையமானது, பிரெஞ்சு ஊடகங்களிலும், பல்கலைகழகங்களிலும் என பல்வேறு மட்டங்களிலும் ஓர் அங்கீகாரத்தினை பெற்றுள்ள நிலையில், இப்பகுதியில் தமிழர்களின் பண்பாட்டு பெருநாளாகிய தைத்திருநாளினை கொண்டாடுவது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக அமைவதோடு, இதன்பால் கிடைக்கின்ற சமூக,பண்பாட்டு அங்கீகாரமானது எதிர்காலத்தில் தமிழர்களுக்கு புதிய கதவுகளை பிரெஞ்சு தேசத்தில் திறக்கும் என்ற நம்பிக்கையினை சங்கத்தின் தலைவர் திரு. இராசையா சிறிதரன் அவர்கள் வெளிப்படுத்தினார்.

வர்த்தகர்களின் நிகழ்வாக மட்டுமல்லாது வாடிக்கையாளர்களையும் இணைத்த ஒர் கூட்டுநிகழ்வாக, 2 யூறோ பெறுமதியான நல்வாய்ப்பு சீட்டு வர்த்தக நிறுவனங்கள் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த பொருளாளர் திரு.ஏகாம்பரம் மதிவதணன் அவர்கள், நிகழ்வரங்கில் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டம்
பார்க்கப்படும் என்றார்.

கரகாரட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என தமிழர்களின் மரபுசார்ந்த கலைவடிவங்கள் நிகழ்வரங்காக அமைய இருப்பதோடு, நடனம், பாடல் , இசை என இயல் இசையோடு, தமிழர் திருநாள் தொடர்பில் பிரெஞ்சு மொழியில் காணொளி ஆவணம் ஒன்றும் வெளியிடப்படுகின்றது என உப-தலைவர் வின்சன் றூபன் தெரிவித்திருந்தார்.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்கின்ற கோடைகால பெருநிகழ்வாக தேர்த்திருவிழா அமைவதுபோல், எதிர்காலத்தில் தமிழர் திருநாளும் பல்லாயிரணக்கான மக்கள் பங்கெடுக்கின்ற குளிர்கால புத்தாண்டு நிகழ்வாக இப்பகுதியில் தைத்திருநாள் அமையும் என்ற நம்பிக்கையினை முன்னாள் தலைவரும் செயற்குழு உறுப்பினருமாகிய திரு. செல்லத்துரை சிறிபாஸ்கரன் தெரிவித்தார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ஏப் 2 I யுவன் சங்கர்ராஜா SHOW

யூலை 2I இளையராஜா இசை நிகழ்ச்சி

தமிழர் நிகழ்வுகள்

  • All
  • உலகம்
உள்ளதை உள்ளபடி
சிறப்பு நிகழ்ச்சிகள்

உள்ளதை உள்ளபடி

March 5, 2023
வெளிநாட்டவர்களை தமிழால் மயக்கிய இசை
சிறப்பு நிகழ்ச்சிகள்

வெளிநாட்டவர்களை தமிழால் மயக்கிய இசை

March 5, 2023
தமிழர் வீடுகளில் தொடர் கொள்ளை I எச்சரிக்கை
செய்திகள்

தமிழர் வீடுகளில் தொடர் கொள்ளை I எச்சரிக்கை

March 3, 2023
WEEK END VIEW வாரந்த அலசல்
சிறப்பு நிகழ்ச்சிகள்

WEEK END VIEW வாரந்த அலசல்

February 20, 2023

பிரான்ஸ் தமிழ் செய்திகள்

  • All
  • சிறப்பு நிகழ்ச்சிகள்
உள்ளதை உள்ளபடி
சிறப்பு நிகழ்ச்சிகள்

உள்ளதை உள்ளபடி

March 5, 2023
வெளிநாட்டவர்களை தமிழால் மயக்கிய இசை
சிறப்பு நிகழ்ச்சிகள்

வெளிநாட்டவர்களை தமிழால் மயக்கிய இசை

March 5, 2023
தமிழர் வீடுகளில் தொடர் கொள்ளை I எச்சரிக்கை
செய்திகள்

தமிழர் வீடுகளில் தொடர் கொள்ளை I எச்சரிக்கை

March 3, 2023
  • வாயில்
  • அரசியல்
  • உரைக்களம்
  • உலகம்
  • சிறப்பு நிகழ்ச்சிகள்
  • செய்திகள்
  • நாடகம்
  • நிகழ்வுகள்
© Copyright Valary.Tv 2019-2023
No Result
View All Result

© 2023 Valary.tv