தமிழர்களின் ஒருத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில், இலங்கை இந்திய வர்த்தகர் சங்கம் பிரான்ஸ் நடாத்தும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பெருநாளுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.
தமிழர்களின் கூட்டுவாழ்வியல் பண்பாடாக, ஒவ்வொரு வர்த்தகர்களின் ஒரு பிடி அரசியின் கூட்டுப்பொங்கலை வெளிப்படுத்தும் வகையில், லாச்சப்பல் வர்த்தக பெருந்தகைகள் ஒருபிடி அரிசி பெறும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
எதிர்வரும் சனவரி 15ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு லாசப்பலின் மையப்பகுதியில், பொதுப்பொங்கலிடலுடன் நிகழ்வுகள் தொடங்க இருக்கின்றன.
இயல் இசையென தமிழர்களின் பாரம்பரிய கலைவடிவங்கள் சங்கமிக்க, பல பரிசில்களை வழங்கும் வகையில் நல்வாயப்பு சீட்டும் வர்த்தக நிலையங்களில் வழங்கப்படுகின்றது.