பிரித்தானியாவுக்கு சிறிலங்கா அழுத்தம்

தாயகம், தேசியம், அரசியல் இறைமை எனும் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பின் ஜனநாயக வடிவமாக திகளும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வு பிரித்தானியாவில் தொடங்கியது.

இன்று வெள்ளிக்கிழமை ( டிசெம்பர் 2) தொடங்கியுள்ள இந்த அமர்வு மூன்று நாட்கள் தொடர் நிகழ்வாக பக்க நிகழ்வுகளுடன் இடம்பெற இருக்கின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்கள், தோழமையாளர்கள் உட்பட பலரும் புலம்பெயர் தேசங்களில் இருந்து நேரடியாக வந்து லண்டனில் முகாமிட்டிருக்கும் இவ்வேளை, உலக வள அறிஞர்கள் பலரும் இந்த அமர்வுகளில் பங்கெடுத்து. கருத்துரைகளை வழங்க இருக்கின்றனர்.

– தமிழீழ தேசத்தின் மீதான சிங்கள அரச ஆக்கிரமிப்பும், தொடரும் நில அபகரிப்பும்
– உலக உணவு நெருக்கடியும் தமிழர் தேசத்தின் சவால்களும்
– பூமி வெப்பமடைதலும் அதன் இயற்கை மாற்றங்களை எதிர்கொள்ளுதலும்
ஆகிய மூன்று விடயங்களை பேசுபொருளாக கொண்டு இடம்பெறுகன்ற இந்த அமர்வில் அமைச்சுக்களின் அறிக்கைகள், விவாதங்கள், கருத்துரைகள், தீர்மானங்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயக வலிமையினை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *